வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2017 (17:46 IST)

இறுதிக் கட்டத்தில் அரவிந்த் சாமி படம்

அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள ‘வணங்காமுடி’ திரைப்படம், இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.




 

செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி நடித்துவரும் படம் ‘வணங்காமுடி’. ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன், சிம்ரன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். டி.இமான் இசை அமைக்கிறார். இந்த வருட தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம், தூத்துக்குடி மற்றும் கொடைக்கானல் பகுதிகளி நடைபெற்று வருகிறது. பார்வையாளர்களை ஸீட் நுனியில் அமரவைக்கும் சேஸிங் காட்சிகள், நவம்பர் இரண்டாவது வாரத்தில் கொடைக்கானலில் படமாக்கப்பட இருக்கிறது. அதன்பின்னர், டிசம்பர் மாதம் கொடைக்கானலில் 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்துகின்றனர். அத்துடன், மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.