1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (15:52 IST)

வலிமைதான் அஜித் படத்திலேயே அதிக பட்ஜெட்டாம்… கொரோனா செய்த வினை!

கொரோனா கால தாமதத்தால் வலிமை படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக மாறியுள்ளதாம்

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 14 மாத கால தாமதம் ஆன வலிமை ரிலீஸால் படத்தின் தயாரிப்பாளருக்கு 25 கோடிக்கு மேல் வட்டி அதிகமாகியுள்ளதாம். இதனால் அஜித் படத்திலேயே மிக அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக வலிமைதான் என்று சொல்லப்படுகிறது. இதனால்தான் தனது அடுத்த படத்தையும் போனி கபூருக்கே செய்ய முடிவு செய்துள்ளாராம் தல.