திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (06:55 IST)

அஜித்தின் பார்வைக்கு சென்ற வலிமை மோஷன் போஸ்டர்… ரிலீஸ் எப்போது?

அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் உருவாக்கப்பட்டு அஜித்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. ஆனால் அவர் தயாரிக்கும் மற்ற படங்களுக்கான வேலைகள் மட்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் எங்கு சென்றாலும் வலிமை அப்டேட் எனக் கேட்டு தர்மசங்கடமான சூழ்நிலைகளை உருவாக்கினர். அதையடுத்து அஜித் தலையிட்டு அவர்களை அடக்கும் விதமாக ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் இப்போது வலிமை சம்மந்தமான அப்டேட் குறித்து ஆலோசிப்பதற்காக தயாரிப்பாளர் போனி கபூர் மும்பையில் இருந்து சென்னை வந்து அஜித் மற்றும் இயக்குனர் ஹெச் வினோத்தை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து படம் சம்மந்தமாக முதல் அப்டேட்டாக மோஷன் போஸ்டர் ஒன்றை உருவாக்கியுள்ள படக்குழு அதை அஜித்தின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளதாம். அதைப் பார்த்த அஜித் பாசிட்டிவ்வான பதிலை சொல்லியுள்ளார். அதனால் விரைவில் வலிமை மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.