’மாமனிதன்’ படத்தை பாராட்டி வைரமுத்து எழுதிய கவிதை!
விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படம் ஆஹா ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தை பல திரையுலக பிரபலங்கள் பார்த்து பாராட்டி வரும் நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து இந்த படத்தை சமீபத்தில் பார்த்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அவர் கவிதை வடிவில் மாமனிதன் படம் குறித்து கூறியதாவது:
அண்மையில்தான் பார்த்தேன்
மாமனிதன்
வாழ்வின்
கருத்த நிழலொன்று
திரையில் விழுந்திருக்கிறது
சாரம் இதுதான்:
சமூகத்தில்
மிருகங்கள் சில உள
ஆனால்
தெய்வங்கள் பலப் பல
சீனு ராமசாமி!
விஜய்சேதுபதி!
வாழ்த்துகிறேன்
கண்டால்
கண்ட இடத்தில்
உங்கள் தலைகோதிக் கொடுப்பேன்