1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2017 (17:06 IST)

வைக்கம் விஜயலட்சுமி 67 பாடல்கள் இசைத்து உலக சாதனை

வீணையில் தொடர்ந்து 67 பாடல்களை இசைத்து வைக்கம் விஜயலட்சுமி உலக சாதனை படைத்துள்ளார்.


 

 
கேரள பின்னணி பாடகி விஜயலட்சுமி இசையில் உலக சாதனை படைத்துள்ளார். கேரளா வைக்கம் பகுதியைச் சேர்ந்த இவர் பார்வையற்றவர். இவர் காயத்ரி வீணை என்று ஒற்றை கம்பி மட்டுமே கொண்ட வீணை ஒன்றை வைத்துள்ளார்.
 
எர்ணாகுளத்தில் நடந்த கின்னஸ் சாதனை போட்டியில் தொடர்ந்து  வீணையில் 5 மணி நேரம் 67 பாடல்களை வாசித்து உலக சாதனை படைத்தார்.  இதற்கு முன் பார்வையற்ற மாற்றுதிறனாளி ஒருவர் 51 பாடல்களை வீணையில் இசைத்தது சாதனையாக இருந்தது.
 
மேலும் இவர் வைத்திருக்கும் வீணை அதிக அளவில் யாரும் வைத்திருப்பதும் இல்லை, வாசிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.