செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜூன் 2021 (13:16 IST)

பேச்சுவார்த்தை சுமூகம்… ஷங்கருக்கு 4 கோடி கொடுக்கும் வடிவேலு!

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தின் பிரச்சனையில் சுமூகமாக பேச்சுவார்த்தை முடிய உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்கவில்லை. இடையில் சில படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் அவர் பெயர் சொல்லும் படங்களாக அமையவில்லை. இந்நிலையில் தனது வெற்றிப்படமான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். இதனால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டது.

இந்நிலையில் இப்போது முன்னணி தயாரிப்பாளர்கள் சிலர் சேர்ந்து அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துகின்றனராம். மேலும் இந்த பிரச்சனைகள் விரைவில் முடிக்கப்பட்டு வடிவேலு வரிசையாக படங்களில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

இதன் மூலம் படத் தயாரிப்பாளரான ஷங்கருக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் 4 கோடியை வடிவேலு தர சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடிவேலுவால் ஷங்கருக்கு 7 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பையும் இணைத்து வைத்தது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என சொல்லப்படுகிறது.