லாரன்ஸ் படத்தில் இருந்து விலகிய வடிவேலு… இதுதான் காரணமா?
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் லாரன்ஸ் தன்னுடைய தம்பி எல்வினை கதாநாயகனாக்கி அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
நடிகர் லாரன்ஸ் நடிகராகவும், இயக்குனராகவும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய தம்பியான எல்வினை கதாநாயகனாக ஆக்கும் முயற்சியில் சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தார். அதையடுத்து இப்போது கமர்ஷியல் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் லாரன்ஸும் ஒரு முக்கியக் கதாபத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வடிவேலுவை அனுகியுள்ளனர். ஆனால் அவர் கேட்ட சம்பளம் மிக அதிகமாக இருந்ததால் தயாரிப்பு தரப்பு தயங்கவே, அந்த படத்தில் இருந்து விலகியுள்ளாராம் வடிவேலு. மேலும் இந்த படத்தின் தயாரிப்பு தரப்பும் மாறி பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.