1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: சனி, 11 மே 2024 (19:54 IST)

'நிக்கிறேன்.. உங்கள எதிர்த்து நிக்கறேன்’.. உறியடி விஜயகுமாரின் ‘எலக்சன்’ டிரைலர்..!

உறியடி விஜயகுமார் நடித்த எலக்சன் என்ற திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி உள்ளது. 
 
முழுக்க முழுக்க அரசியல் கதையம்சம் கொண்ட இந்த படம் சாதாரண நிலையில் இருந்த விஜயகுமாரை திடீரென அரசியல் இழுத்து விட்டதும் அதன் பிறகு தொண்டனாக இருந்து திடீரென தலைவர் பதவிக்கு போட்டியிடுவது காட்சிகள் இன்று வெளியாகி உள்ள டிரைலரில் உள்ளன. 
 
அரசியல் உள்குத்து வேலைகள், சதிகள், அடிதடி சண்டைகள், தேர்தல், வாக்குப்பதிவு என பல்வேறு காட்சிகள் இந்த ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளதால் இது ஒரு முழு நீள அரசியல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உறியடி விஜயகுமார் நடித்த பைட் கிளப் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் அதேபோல் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
‘உறியடி’ விஜயகுமார்,  ப்ரீத்தி அஸ்ரானி,  ரிச்சா ஜோஷி, ஜார்ஜ் மரியான், திலீபன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
 
Edited by Siva