ஒரே மாதத்தில் இரண்டு விஷால் படங்கள் ரிலீஸ்!!
இந்த மாதம், விஷால் நடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீஸாகின்றன. விஷால் நடிப்பில், மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘துப்பறிவாளன்’.
பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்னும் இரண்டு நாட்களில் ரிலீஸாக இருக்கிறது.
அத்துடன், விஷால் மலையாளத்தில் அறிமுகமாகும் ‘வில்லன்’ படமும் இந்த மாதம் 28 ஆம் தேதி ரிலீஸாவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், மஞ்சு வாரியர் மற்றும் ஹன்சிகா மோத்வானி இருவரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஹன்சிகாவுக்கும் இதுதான் முதல் மலையாளப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.