1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (08:05 IST)

போதை பொருள் விவகாரம்: மேலும் இரண்டு நடிகைகள் கைது!

கடந்த சில நாட்களாக போதைப்பொருள் விவகாரம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே பாலிவுட் நடிகை ரியோ மற்றும் கன்னட நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி ஒரு சில முன்னணி பாலிவுட் நடிகைகளிடம் விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது சின்னத்திரை நடிகை ஒருவரும் பிக்பாஸ் நடிகை ஒருவரும் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிக்பாஸ் கன்னடம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஆதம் பாஷா. இவர் சின்னத்திரை நடிகை அனிகா என்பவரிடம் போதைப் பொருள் வாங்கி பயன்படுத்தியதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு தகவல் வெளிவந்தது. இதனடிப்படையில் திரட்டப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்
 
போதைப் பொருள் விவகாரத்தில் அடுத்தடுத்து கன்னட திரை நட்சத்திரங்கள் கைது செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது