1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 நவம்பர் 2023 (08:06 IST)

அருவருப்பான பேச்சு.. நடிகர் மன்சூர் அலிகானுக்கு த்ரிஷா கண்டனம்..!

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது த்ரிஷா குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியதை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடித்த நிலையில் அந்த படத்தில் த்ரிஷாவும் நடித்திருந்ததாகவும் ஆனால் த்ரிஷாவை தூக்கிட்டு போய்  என்ஜாய் பண்றது போன்ற காட்சிகள் இல்லை என்றும் அதனால் தான் மிகவும் வருத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

அவருடைய பேச்சு காமெடியாக இருந்தாலும் அருவருக்கத்தக்க வகையில் இருந்ததாக பலர் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் நடிகை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் ’தற்போது தான் மன்சூர் அலிகான் வீடியோவை பார்த்தேன்.  என்னுடன் அவர் திரையில் இணைந்து நடிக்க விருப்பப்படலாம். ஆனால் இதுவரை அவருடன் நடிக்க வில்லை என்பது எனக்கு ஒரு ஆறுதல். இனிமேல் அவருடன் நடிக்க மாட்டேன் இவர் போன்ற நபர்களால் தான் மனித குலத்திற்கே அவப்பெயர்’ என்று தெரிவித்தார். த்ரிஷாவின் இந்த பதிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

Edited by Siva