ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 நவம்பர் 2020 (09:47 IST)

தெறிக்கவிடும் டாம் அண்ட் ஜெரி! 90ஸ் கிட்ஸ் கார்ட்டூன் படமாக..! – அட்டகாசமான ட்ரெய்லர்

உலகம் முழுவதும் உள்ள 90ஸ் கிட்ஸின் விருப்பமான கார்ட்டூன் தொடரான டாம் அண்ட் ஜெரி தொடர் லை ஆக்‌ஷன் படமாக வெளியாகவுள்ள நிலையில் அதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள 90ஸ் கிட்ஸின் பால்ய கால நினைவுகளில் நீங்காத இடம் பெற்றுள்ள ஒரு கார்ட்டூன் தொடர் டாம் அண்ட் ஜெரி. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக கார்ட்டூன் ஏரியாவில் டானாக வலம் வந்த இந்த தொடர் சமீப காலமாக பல்வேறு கார்ட்டூன்கள் மற்றும் புதிய சேனல்களின் வருகையால் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டு விட்டது.

எனினும் இன்னமும் பலரிடம் மவுசு குறையாமல் உள்ள டாம் அண்ட் ஜெரியை லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாக்க வார்னர் ப்ரோஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டில் வெளியாக உள்ள நிலையில் அதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டாம் மற்றும் ஜெரி மற்றும் சில விலங்குகள் மட்டும் கார்ட்டூனாக இருக்க மீதம் அனைத்து நிஜ இடங்கள், கதாப்பாத்திரங்களாக உள்ளன.

பிரபல டாம் அண்ட் ஜெரி இயக்குனர்கள் வில்லியம் ஹன்னா,ஜோசப் பார்பரா எழுதிய கதையை டிம் ஸ்டோரி இயக்கியுள்ளார். ஹாலிவுட் டாப் நடிகர்கள் க்ரேஸ் மார்டஸ், மைக்கெல் பென்னா மற்றும் இந்தி நடிகை பல்லவி ஷர்தா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.