தியாகராஜன் குமாரராஜாவின் படத்தின் பெயர் அநீதி கதைகள்...?
ஆரண்ய காண்டம் படத்துக்குப் பிறகு சுமார் 5 வருட இடைவெளிக்குப் பின் தியாகராஜன் குமாரராஜா புதுப்படம் இயக்குகிறார். விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.
யுவன் இசையில், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அநீதி கதைகள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், இந்தப் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.