வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (23:59 IST)

விரைவில் 'துப்பறிவாளன் 2' விஷால் உறுதி

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன்' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஷால் இதுவரை ஏற்றிராத துப்பறிவாளர் வேடம், மிஷ்கின் பாணி திரைக்கதை, சிறப்பான இசை ஆகியவற்றால் இந்த படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது.



 
 
இந்த நிலையில் இன்று 'துப்பறிவாளன்' படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விஷால், 'மிஷ்கினுடன் பணிபுரிவதில் பெருமை அடைகிறேன். அவர் இயக்கத்தில் அடுத்தடுத்து படங்கள் நடிக்க விரும்புகிறேன். கூடிய விரைவில் 'துப்பறிவாளன்' படத்தின் இரண்டாம் பாகம் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும்' என்று கூறினார்.
 
தற்போது ரஜினி, கமல் முதல் தனுஷ் வரை அனைவரும் இரண்டாம் பாக படங்களில் நடித்து வரும் நிலையில் விஷாலும் இரண்டாம் பாக பட்டியலில் இறங்கிவிட்டார். ஏற்கனவே விஷால் சண்டக்கோழி 2' படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.