திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 மார்ச் 2020 (08:54 IST)

பட்டப்பகலில் சாலையில் முதியவரை வெட்டிய இளைஞர்கள் – தடுக்க முயன்ற இளைஞருக்கு ஏற்பட்ட சோகம் !

புதுச்சேரியில் கடைக்கு முன்னால் சிகரெட் குடிக்கக்கூடாது என சொன்ன நபரை இளைஞர்கள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அருகே திருக்கனூர்  எனும் பகுதி அமைந்துள்ளது. அங்கே திருஞானம் என்பவர் பெட்டிக்கடை வைத்தி நடத்தி வந்துள்ளார். இவரது கடைக்கு அருகே உள்ள சலூனுக்கு முடிதிருத்த வந்த மூன்று இளைஞர்கள் அங்கே நேரம் ஆகும் என சொன்னதால் அருகில் உள்ள திருஞானத்தின் கடைக்கு சிகரெட் குடிக்க வந்துள்ளனர்.

அங்கு சிகரெட் வாங்கிய அவர்களிடம் மறைவான இடத்துக்கு சென்று அதைக் குடிக்க சொல்லியுள்ளார் திருஞானம். இதை அவர்கள் கேட்காததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் கோபமான இளைஞர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திருஞானத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் திருஞானத்துக்கு கையில் வெட்டு விழ அவர் அலறியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அவரது தம்பியான உமாபதி வந்து அண்ணனைக் காப்பாற்ற முயல அவரையும் வெட்டியுள்ளனர்.

இருவரின் சத்தமும் கேட்டு அருகில் ஓடி வந்து பார்த்து அந்த இளைஞர்களை \ பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அதற்குள் இளைஞர்கள் மூன்று பேரும் தப்பிச் சென்றுவிட்டனர். இது சம்மந்தமாக போலிஸில் புகாரளிக்க அவர்கள் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.