திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (18:04 IST)

மூன்று தீபாவளி படங்களும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ்.. ரசிகர்கள் குஷி..!

கடந்த தீபாவளி அன்று வெளியான மூன்று திரைப்படங்களும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த தீபாவளி அன்று கார்த்தி நடித்த ’ஜப்பான்’ கார்த்திக் சுப்புராஜ் நடித்த ’ஜிகர்தண்டா 2’ மற்றும் விக்ரம் பிரபு நடித்த ’ரெய்டு’ ஆகிய மூன்று படங்கள் வெளியானது. இதில் ஜிகர்தண்டா 2’ மட்டுமே திரையரங்குகளில் வெளியான வெற்றி பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மேற்கண்ட மூன்று படங்களும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருப்பதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் ’ஜிகர்தண்டா 2’ மற்றும் ’ஜப்பான்’ ஆகிய திரைப்படங்களும் ஆஹா ஓடிடியில் ’ரெய்டு’ படமும் வெளியாக உள்ளது. 
 
அதுமட்டுமின்றி வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று டாக்குமெண்டரி படமான ’குசா முனுசாமி வீரப்பன்’  என்ற  படமும் ஜி5 ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran