வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : திங்கள், 20 ஜூலை 2020 (17:12 IST)

பிரபல நடிகையின் வாழ்க்கை சினிமாவாக உருவாகிறது

இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் தொண்ணூறுகளில் வெளியான படம் திருடா திருடா.  இப்படத்தில் இடம்பெற்ற கொஞ்சம் நிலவு  கொஞ்சம் நெருப்பு ஒன்றாக சேர்ந்தால் என்ற பாட்டில் நடனம் ஆடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அனு அகர்வால்.

அதன்பின் எதிர்பாரத விதமான கடந்த 1999 ஆம் ஆண்டு சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கோமா நிலைக்குச் சென்று 29 நாட்களுக்குப் பின் அதிலிருந்து மீண்டார்.

தன் வாழ்க்கையை மையைப்படுத்தி அனு அகர்வால் புத்தகமாக எழுதியுள்ளார். இந்த நிலையில் இவரது வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸாக தயாராகவுள்ளது. இதில் அவரே நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.