பாகுபலி மூன்றாம் பாகம் கண்டிப்பாக உண்டு - ராஜமௌலி
பாகுபலி மூன்றாம் பாகம் கண்டிப்பாக உண்டு - ராஜமௌலி
பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்துக்கு, பாகுபலி கன்க்ளூசன் - அதாவது முடிவு என்று பெயர் வைத்துள்ளனர்.
அதனால், இரண்டாம் பாகத்தோடு பாகுபலி சீரிஸ் முடிவுக்கு வரும் என்றே அனைவரும் நினைத்திருந்தனர்.
இந்நிலையில், பாகுபலி மூன்றாவது பாகம் கண்டிப்பாக வரும் என ராஜமௌலி கூறியுள்ளார்.
பாகுபலி இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இரண்டாவதுகட்ட படப்பிடிப்பை திட்டமிட்ட நாள்களுக்கு முன்பே முடித்திருக்கிறார்கள்.
விரைவில் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.
பாகுபலி விஸ்தாரமான கதை, அதன் மூன்றாவது பாகம் கண்டிப்பாக வரும் என்ற ராஜமௌலியன் பேட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.