செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (19:35 IST)

'தனி ஒருவன் -2' பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

thani oruvan 2
தனி ஒருவன் 2 வது பாகம் பட அதிகாரப்பூர்வ  அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மோகன்ராஜா. இவர் இயக்கத்தில்,  கடந்த 2015 ஆம் வெளியான படம் தனி ஒருவன்.

இப்படத்தில் ஜெயம்ரவி,  நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி 8 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

எனவே  இப்படத்தின் 2 வது பாகம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியான  நிலையில்,  சமீபத்தில் தனி ஒருவன்-2 பட டெஸ்ட் ஷூட்  நடைபெறவுள்ளதாக இணையதளத்தில் தகவல் பரவியது.

வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவு நாளில் இப்படம் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என  கூறப்பட்டது. அதன்படி, இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜெயம்ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மோகன்ராஜா இப்படத்தை இயக்கவுள்ளார். சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். .  கிரண் கலை வடிவமைப்பு மற்றும் ஆர்.வசந்தகுமார் எடிட்டராகப் பணியாற்றுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தனி ஒருவன் 2 பட புரொமோ வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.