ப்ரண்ட்ஷிப் பாடலுக்கு நடனமாடும் விஜய் & பிரசாந்த்- தளபதி 68 முதல் பாடல் சீக்ரெட்ஸ்!
பிகில் படத்துக்குப் பிறகு விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து இப்போது நடக்கும் ஷூட்டிங்கில் விஜய், பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட நடிகர்கள் நடனமாடும் பாடல் ஒன்றை இயக்கி வருகிறாராம் வெங்கட்பிரபு. இந்த பாடல் நட்பின் புகழ் பாடும் ஒரு பாடல் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.