1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 மார்ச் 2019 (19:23 IST)

லீக்கானது தளபதி 63 படத்தின் ஒன் லைன் ஸ்டோரி ! இதுதான் படத்தின் கதையா?

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.
 

 
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. 
 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு காபந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், இந்த படம் பெண்கள் கால்பந்து போட்டியை பற்றிய கதையாக இருக்கும் என ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின. 
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதையும் வெளியாகியுள்ளது, அந்தர்வாகியில் சமீபத்தில் வந்த தகவலின்படி, இந்த படம் கால்பந்து விளையாட்டை மட்டும் மையப்படுத்திய கதை இல்லை என்றும்  இந்தப்படம் நண்பனுக்காக பழிவாங்கும் ஒரு கதை என்றும் கூறப்படுகிறது.
 
இப்படத்தில் விஜய் மற்றும் கதிர் கல்லூரி காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருப்பார்களாம் அவர்களது லட்சியமே உலகத்தரம் வாய்ந்த ஒரு கால்பந்து வீரராக வரவேண்டும் என்பது தானாம். 

ஆனால், இருவருமே ஒரு கட்டத்தில் கால்பந்து பயிற்சியாளராக மாறிவிடுகின்றனர். ஒரு சமயத்தில் கதிர் ஒரு கால்பந்து போட்டியின்போது கொல்லப்படுகிறார். ஆனால், அவர் இயற்கையாக மரணிக்கவில்லை என்று அறிந்த விஜய் அவரது மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடித்து கதிர் வழிநடத்தி வந்த கால்பந்து அணியையும் எப்படி வெற்றி பெறச் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதைக்கரு. சொல்லப்போனால் நண்பனின் கனவை எப்படி விஜய் நிறைவேற்றுகிறார் என்பது தான் இப்படத்தின் மையக்கரு.