புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Murugan)
Last Modified: ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (15:12 IST)

மன்னிப்பு கேட்ட தல… கண்டு கொள்ளாத தளபதி

நடந்த சம்பவங்களுக்காக தல மன்னிப்பு கேட்க, தளபதி கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள். 


 

 
நேற்று தல அஜீத்தின் வழக்கறிஞரிடம் இருந்து மீடியாக்களுக்கு ஒரு அறிக்கை வந்தது. அதில், தனக்கு ரசிகர் மன்றம் எதுவும் இல்லை என்றும், ஒருசிலர் தன் பெயரையும், புகைப்படத்தையும் தவறாகப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், அப்படி தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி யாருக்காவது மனவருத்தம் ஏற்பட்டிருந்தால், அதற்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும் தல குறிப்பிட்டிருந்தார்.
 
சில நாட்களுக்கு முன்பு, விஜய் நடித்த ‘சுறா’ மொக்கை என ஒரு பெண் நிருபர் ட்விட்டரில் பதிவிட, அந்த நிருபரை காது கூசும் அளவுக்கு கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர் தளபதி ரசிகர்கள். இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு தளபதியிடம் இருந்து ஒரு அறிக்கை வந்தது. அதில், ‘பெண்களை மதிக்க வேண்டும்’ என்றுதான் இருந்ததே தவிர, நடந்த சம்பவத்தைப் பற்றியோ அல்லது அதற்கு மன்னிப்பு கேட்டோ எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை.
 
பொதுவாகவே, நல்ல மனிதர், மனிதாபிமானம் கொண்டவர் என்று பெயர்பெற்றவர் தல அஜீத். அதனால்தான், அவர் எந்த புரமோஷனில் கலந்து கொள்ளாமலும் பிளாக் பஸ்டர் ஹிட்டாகின்றன அவருடைய படங்கள். இந்த சம்பவம், அவருடைய மதிப்பைக் கூட்டும் வகையில் அமைந்துள்ளது.