புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2017 (16:27 IST)

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஆதரவு தெரிவித்த தெலுங்கு தயாரிப்பாளர்கள்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு, தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.



 
ஜிஎஸ்டி வரியால் தயாரிப்பாளர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு தனியாக 10 சதவீதம் கேளிக்கை வரியை அறிவித்துள்ளது. இதை எதிர்த்து, கடந்த சில நாட்களாக புதுப்படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள். அவர்களுக்கு, தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவாக இருந்து வருகிறது.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இந்தப் பிரச்னை எப்போது முடியும் என்று தெரியாமல் இழுத்துக்கொண்டே போகிறது. தீபாவளிக்கு விஜய்யின் ‘மெர்சல்’, சசிகுமாரின் ‘கொடிவீரன்’ ஆகிய படங்கள் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டிரைக் தொடர்ந்தால் புதுப்படங்கள் ரிலீஸாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக, தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.