திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 ஏப்ரல் 2021 (20:20 IST)

ஹாலிவுட் ''கிங்காங்'' போன்று உருவாகும் தமிழ்படம் !

ஹாலிவுட்டில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி உலகமெங்கும் ஹிட் அடித்த படம் கிங்காங். ஒரு கிங்காங் குரங்குக்கு பெண் மேல் ஏற்படும் காதலும் அவர்களின் ஏக்கம் , பிரிவு, அன்பு இவற்றைக் கலந்துகட்டி ஒருகாவியம் செய்திருந்தார்கள்.

புதுமையான திரைக்கதையில் இப்படம் வெளியாகி அனைத்துத் தரப்பு மக்களின் ஏகோபித்த ஆதரவை இப்படம் வெற்றி வசூல் வாரிக் குவித்தது.

அதன்பின்னர் தற்போது கிங்காங் படம் போன்று தமிழில் ராட்சத மனித குரங்கை கதைக்களமாக கொண்டு கபி என்ற படம் உருவாகிறது.

 இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.முரளி தயாரிக்கவுள்ளார். இப்படம் அனிமேட்ரானிக்ஸ் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்ப முறையில் முதன்முறையாக இந்தியாவில் உருவாகிறது. இப்படத்தை கவுசிக்கரா மற்றும் என்.ராமசாமி இணைந்து கதை எழுதியுள்ளனர்.  இப்படத்திற்காக மிகப்பெரிய கணினி நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகியுள்ளது.