கடைசியில் அதுக்கும் ரெடியான தமன்னா: என்ன கொடுமை!!
தெலுங்குப் பட உலகில் 56 வயது ஆனாலும் ரிட்டயர்டே ஆகாமல் இன்னமும் கூட இளமை வேடங்களில் நடித்து வருகிறார் நடிகர் பாலகிருஷ்ணா.
மூத்த ஹீரோக்களுடன் வயதைக் காரணம் காட்டி நடிக்கத் தயங்கும் ஹீரோயின்கள் ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் இருக்கும் போது பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேருவார்கள்.
நயன்தாரா, த்ரிஷா, லட்சுமி ராய், ராதிகா ஆப்தே, அஞ்சலி, ஸ்ரேயா என நீளும் இந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர் தமன்னா.
பாகுபலி படத்திற்கு பிறகு தன் மார்க்கெட் உயரும் என எதிர்பார்த்தார். ஆனால் அந்த அளவுக்கு ஏற்றம் இல்லை. இதனால் கிடைக்கும் படங்களில் எல்லாம் நடிக்கும் தமன்னா இப்போது பாலகிருஷ்ணாவுடன் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.
இதற்கு காரணம் பாலகிருஷ்ணாவுடன் நடிக்க கொடுக்கப்படும் சம்பளம் தான்.