1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 7 ஜூன் 2017 (22:29 IST)

என் தோழிக்கு ஓட்டு போடுங்களேன் ப்ளீஸ்! யாருக்காக கெஞ்சுகிறார் தமன்னா?

பிரபல நடிகை தமன்னாவுக்கும் அரசியலுக்கு வெகுதூரம், அரசியல் குறித்து அரிச்சுவடி கூட தெரியாத தமன்னா, தனது தோழி ஒருவருக்கு ஓட்டு போடும்படி டுவிட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த தோழி யார் தெரியுமா? பிரபல பெண் தொழிலதிபர் தானாஷ் எம்.பாட்டியா



 


ஆம், 2017ஆம் ஆண்டின் பெண் தொழிலதிபர் விருது விரைவில் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்காக போட்டியிடும் 6 பெண் தொழிலதிபர்களில் தமன்னாவின் நெருங்கிய தோழியான தானாஷ் எம்.பாட்டியாவும் ஒருவர். இவருக்கு அனைவரும் ஆன்லைனில் ஓட்டு போடுங்கள் என்று தமனனா தனது டுவிட்டரில் கேட்டு கொண்டுள்ளார்.

தமன்னாவின் பெயரும் பாட்டியாவில் தான் முடிகிறது, தானாஷ் எம்.பாட்டியா  பெயரும் பாட்டியாவில் முடிவதால் இருவரும் தோழி மட்டுமா? அல்லது நெருங்கிய உறவினர்களா? என்ற சந்தேகமும் எழுகிறது, எப்படியோ தமன்னாவே சொல்லிவிட்டார், அதனால் கண்ணை மூடிக்கொண்டு ஒரு ஓட்டை போட்டு வைப்போம்