இயக்குனர் ரவிக்குமார் படத்தைக் கிடப்பில் போட்ட சூர்யா?
ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன் மற்றும் மியார் ஜார்ஜ் நடிப்பில் உருவான திரைப்படம் இன்று நேற்று நாளை. தமிழில் அதிகம் வராத டைம் டிராவல் வகையில் வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது. இதையடுத்து அவர் இயக்கிய அயலான் திரைப்படம் ஐந்து ஆண்டுகளாக இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
இதையடுத்து டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ரவிக்குமார், சூர்யாவை இயக்க ஒரு படத்துக்கு ஒப்பந்தம் ஆனார். அடுத்த ஆண்டு இந்த படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது சூர்யா, இந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, இயக்குனர் ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை முடித்ததும் வாடிவாசல் வணங்கான் ஆகிய படங்களில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. அதனால் ரவிக்குமார் படம் இப்போது தொடங்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.