வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 5 மார்ச் 2018 (22:33 IST)

சன்னிலியோனுக்கு திடீரென பிறந்த இரட்டை குழந்தைகள்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ஏற்கனவே நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் நிலையில் இன்று தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இன்று முதல் தனக்கு மூன்று குழந்தைகள் என்றும் சன்னிலியோன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

இந்த நிலையில் இந்த குழப்பத்திற்கு அவரே அடுத்த டுவிட்டில் விடை அளித்துள்ளார். இந்த குழந்தைகள் தனது கணவருக்கு வாடகைத்தாய் மூலம் பிறந்ததாகவும் திருமணமான சில வருடங்களில் தாங்கள் மூன்று குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜுன் மதம் 21ஆம் தேதி வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறக்க செய்த முயற்சியில் தற்போதுதான் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இது எங்களுக்கு புதிய அத்தியாயம் என்று சன்னிலியோன் கணவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். புதியதாக பிறந்த இந்த இரட்டை ஆண் குழந்தைகளுக்கு நோவா சிங் வெபர் மற்றும் அஷெர் சிங் வெபர் என்று சன்னிலியோன் - டேனியல் வெபர் தம்பதிகள் பெயர் வைத்துள்ளனர்.