செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2019 (21:08 IST)

அட்லியை மறைமுகமாக விமர்சனம் செய்தாரா சுந்தர் சி?

இயக்குனர் அட்லி பிரமாண்டமான படங்களை இயக்கினாலும் அவரது படங்கள் மிகப்பெரிய வசூலைக் கொடுத்தாலும், அவர் சொன்ன பட்ஜெட்டில் படம் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மேல் உள்ளது. குறிப்பாக விஜய் மூன்று வேடங்களில் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் குறிப்பிட்ட பட்ஜெட்டை விட மிக அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதால் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் என்று கூறப்படுகிறது 
 
அதேபோல் சமீபத்தில் வெளியான பிகில் திரைப்படமும் 120 கோடி பட்ஜெட்டில் தயாரிப்பதாக அட்லி வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில், அந்த படத்தின் பட்ஜெட் ரூ 180 கோடியாக எகிறியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிகில் படம் 200 கோடி வசூலித்த போதிலும் தயாரிப்பாளருக்கு பெரிய லாபம் எதுவும் இல்லை என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இயக்குநர் சுந்தர் சி இன்று அளித்த பேட்டி ஒன்றில் ’ சில இயக்குனர்கள் பெரிய ஹீரோ படஙகளை இயக்கும்போது ஹீரோக்களை திருப்திப்படுத்துவதில் காட்டும் அக்கறையை தயாரிப்பாளரின் தயாரிப்பு செலவில் காட்டுவதில்லை என்றும்,  ஹீரோவைத் உற்சாகப்படுத்துவதில் மட்டுமே குறியாக இருப்பதாகவும் இதனால் அளவுக்கு அதிகமான பட்ஜெட்டில் படத்தின் தயாரிப்பு செலவு செல்வதாகவும், இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை அடைவதாகவும் கூறியுள்ளார்.
 
ஹீரோ கைகாட்டுபவர்தான் இயக்குனர் என்பதால் அந்த ஹீரோவை வைத்து தொடர்ந்து படங்கள் இயக்க இயக்குனர்கள் சாதாரண பட்ஜெட்டில் முடியவேண்டிய படத்தை பிரமாண்டம் என்ற பெயரில் பெரிய பட்ஜெட் படமாக மாற்றிவிடுவதாகவும் தெரிவித்தார்.
 
சுந்தர் சி பேட்டியில் அட்லி பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் இந்த பேட்டி அட்லியை மறைமுகமாக தாக்குவதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.