புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 18 ஜனவரி 2020 (15:59 IST)

ஆக்‌ஷன் ஒத்துவரல; மீண்டும் காமெடி களத்துக்கே திரும்பும் சுந்தர் சி !

ஆக்‌ஷன் படம் படுதோல்வி அடைந்ததால் அடுத்ததாக தனது ஹிட் படமான அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் எடுக்க இருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

சுந்தர் சியின் ஜானர் என்றால் காமெடி + கவர்ச்சி தான். அவர் எடுத்த முக்கால்வாசிப் படங்கள் எல்லாம் இந்த ஜானரில் அடங்கும். அவற்றில் பெரும்பாலானவை வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர் படங்கள் மினிமம் கியாரண்டி படங்கள் என கோலிவுட்டில் அவர் மேல் நம்பிக்கை உண்டு.

ஆனால் கடைசியாக அவர் இயக்கிய ஆக்‌ஷன் திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக அமைந்தது. எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் போனதால் சுந்தர் சி முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

இப்போதைக்கு ஆக்‌ஷன் கதைகள் வேண்டாம் என முடிவு செய்து தனது ஹிட் ரூட்டான காமெடிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அரண்மனை 1, அரண்மனை 2 வரிசையில் இப்போது அரண்மனை 3 எடுப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் ஆர்யா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர். மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.