திங்கள், 30 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 6 மே 2016 (15:56 IST)

படிப்புக்குப் பிறகுதான் நடிப்பு

படிப்புக்குப் பிறகுதான் நடிப்பு

மணிரத்னத்தின் புதிய படத்திலிருந்து சாய் பல்லவி விலகி, அவருக்குப் பதில் அதிதி ராவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


 


மணிரத்னத்தின் கதாபாத்திரத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே சாய் பல்லவி விலகியதாக அவரது அம்மா கூறியுள்ளார். மணிரத்னத்தின் கதாநாயகிக்கு சாய் பல்லவியைவிட முதிர்ச்சியான முகம் தேவைப்பட்டிருக்கிறது.
 
மணிரத்னம் படத்தின் நாயகி ஒரு மருத்துவக்கல்லூரி மாணவி. இந்த கதாபாத்திரத்துக்கு வேறு எவரையும்விட பொருத்தமானவர், சாய் பல்லவி. அவர் ஜார்ஜியாவில் இறுதியாண்டு படித்துவரும் மாணவி. கதையல்ல, நிஜம்.
 
மலையாளத்தில் சாய் பல்லவி நடித்த பிரேமம், கலி இரண்டும் ஹிட். என்றாலும் புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. மருத்துவ படிப்பு கெட்டுப்போகக் கூடாது என்பதற்காகவே புதிய படங்கள் எதிலும் அவர் கமிட்டாகவில்லை.
 
சீக்கிரம் டாக்டாராக திரும்புங்க, திரையுலகம் காத்திருக்கு.