திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 2 மார்ச் 2018 (22:37 IST)

ராமேஸ்வரம் கொண்டுவரப்படும் ஸ்ரீதேவியின் அஸ்தி...

மறைந்த நடிகை ஸ்ரீதேவி உறவினர் திருமணத்தில் பங்கேற்க துபாய் சென்ர போது அங்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணங்கள் பல கூறப்பட்டாலும் சினிமா துறை சிறந்த நடிகையை இழந்துவிட்டது. 
 
இதனையடுத்து பிப்ரவரி 28 அன்று துபாயில் இருந்து இந்தியா வந்த ஸ்ரீதேவியின் உடல் மும்பை அந்தேரி செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. 
 
பின்னர் அன்று மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. தற்போது ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட உள்ளதாக மும்பை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. போனி கபூர் மற்றும் அவரது குடும்பத்தினர் ராமேசுவரம் சென்று அக்னி தீர்த்த கடற்கரையில் ஸ்ரீதேவியின் அஸ்தியை கரைக்க உள்ளதாகவும், சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை அஸ்தி கரைக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.