திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : சனி, 27 மே 2017 (16:34 IST)

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல கிரிக்கெட் வீரர்

சுரேஷ் கோவிந்த் இயக்கும் டீம் 5 படத்தில் பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஹீரோவாக அறிமுகமாகிறார். 


 

 
பிரபல முன்னாள் இந்திய கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த் 2013ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் ஸ்பாட்-ஃபிக்ஸிங்யில் சிக்கினார். அதன்பிறகு பிசிசிஐ அவருக்கு இந்திய அணியில் விளையாட தடை விதித்தது. இன்று வரை அந்த தடை உள்ளது.
 
இவர் சர்ச்சைக்கு பெயர் பெற்றவர். ஐபிஎல் போட்டியில் ஹர்பஜன்சிங்கிடம் அரை வாங்கி மேலும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். 2015ஆம் முதல் இவர் படங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்த வண்னம் இருந்தது.
 
ஆனால் தற்போது இவர் நடிக்க இருக்கும் படம் குறித்த செய்தியும் வெளியாகியுள்ளது. சுரேஷ் கோவிந்த் இயக்கும் டீம் 5 படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நிக்கி கல்ராணி, மராட்டிய நடிகர் தேஷ் பாண்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
 
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் வெளிவர உள்ளது. பைக் ரேஸ் கதையை மையமாக கொண்ட இந்த திரைப்படம் ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது.