ஸ்குயிட் கேம்ஸ் 2 ஆம் சீசன் வருவது உறுதி… இயக்குனர் அறிவிப்பு!
நெட்பிளிக்ஸில் உருவாகி பிரம்மாண்டமான வெற்றி பெற்ற ஸ்க்விட் கேம்ஸ் சீரிஸ் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாம்.
கொரியன் சினிமா மற்றும் சீரிஸ்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. ஹாலிவுட் சினிமாக்களுக்கு பின்னர் அதிக ரசிகர்களைக் கொண்ட சினிமா உலகமாக கொரியன் சினிமா உள்ளது. இந்நிலையில் நெட்பிளிக்ஸில் ஒரு மாதத்துக்கு முன்னர் வெளியான ஸ்கிவிட் கேம்ஸ் என்ற சீரிஸ் உலகளவில் கவனத்தைப் பெற்று பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த தொடர் குறித்து பேசியுள்ள நெட்பிளிக்ஸின் தலைமை செயல் அதிகாரி இந்த தொடர் உலக அளவில் பிரம்மாண்டமாக ரசிகர்களை சென்று சேரும். ஆங்கிலமல்லாத தொடர்களில் நம்பர் ஒன் சீரிஸாக மாறும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் வெளியானதில் இருந்து இப்போது வரை 11 கோடி பேரால் நெட்பிளிக்ஸ் தளத்திலேயே பார்க்கப்பட்டுள்ளதாம். ஆங்கில சீரிஸ்களுக்கு இணையாக இதன் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில் இப்போது நெட்பிளிக்ஸின் தலைமை செயல் அதிகாரி அதை உறுதி செய்துள்ளார். அதே போலவே தொடரின் இயக்குனர் டாங்- ஹ்யூக் இரண்டாம் சீசனுக்கான அழுத்தமும், அன்பும் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. இதனால் எங்கள் அடுத்த சீசன் உருவாக்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் ஆகிவிட்டது எனக் கூறியுள்ளார்.