முருகதாசுக்கு முதல் சறுக்கலா ஸ்பைடர்?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன.
யூடியூப், டுவிட்டர் ஆகியவற்றில் பெய்டு விமர்சகர்கள் மட்டுமே இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். ஆனால் நடுநிலையாளர்கள் 'ஸ்பைடர்' படத்தை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். இதனால் முருகதாசுக்கு முதல் சறுக்கலாகவே இந்த படம் பார்க்க முடிகிறது.
குறிப்பாக இரண்டாம் பாதியில் லாஜிக் மீறல்கள், நம்ப முடியாத காட்சிகள் அதிகமாக இருப்பதாகவும், மனித நேயம் உள்ளிட்ட ஒருசில விஷயங்கள் இந்த படத்தில் இருந்தாலும் மகேஷ்பாபு, முருகதாஸ் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு ஏமாற்றமே என்று கூறப்படுகிறது. அஜித்துக்கு ஒரு சிவா போன்று, ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யை வைத்து படமெடுத்தால் மட்டுமே இருவருக்கும் பாதுகாப்பு என்று கூறப்படுகிறது.