1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (14:32 IST)

மீனுக்கு டப்பிங் பேசிய விஜய் சேதுபதி

மீனுக்கு டப்பிங் பேசிய விஜய் சேதுபதி

ஃபைண்டிங் டோரி ஆங்கிலப் படத்தின் இந்திப் பதிப்புக்கு இந்தியின் பிரபல நட்சத்திரங்கள் டப்பிங் பேசினர். விஜய் சேதுபதி பேசியிருப்பது ஆங்கிலப் படத்துக்கு அல்ல, கட்டப்பாவ காணோம் தமிழ் படத்துக்கு.
 

 


சிபி, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி நடித்துள்ள கட்டப்பாவ காணோம் படத்தை மணி செய்யோன் இயக்கியுள்ளார். 
 
வாஸ்து மீன் ஒன்று தொலைந்து போவதால் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. வாஸ்து மீன் படத்தின் பிரதான கதாபாத்திரமாக வருகிறது.
 
இந்த மீன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசியுள்ளார். விரைவில் படம் திரைக்கு வரவுள்ளது.