வெற்றிமாறன் கதையில் லிங்குசாமி இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் சூரி…!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சூரியை இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக்கினார். விடுதலை படத்தின் முதல் பாகம் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் சூரி தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வரும் சூரி, அடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது வெற்றிமாறன் கதையில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.