1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2017 (15:41 IST)

சோனியா அகர்வால் நடிக்கும் அகல்யா... 5 மொழிகளில் தயாராகிறது

சோனியா அகர்வால் அவ்வப்போது நாயகியாகவே நடிக்கிறார். ஆனால், அந்தப் படங்கள் துரதிர்ஷ்டவசமாக வெளிச்சத்துக்கு வருவதில்லை. அவர் நடிக்கும் புதிய படம், அகல்யா.

 
ஹாரர் படமான இதில் சோனியா அகர்வால்தான் நாயகன் நாயகி எல்லாம். அவரைச் சுற்றியே கதை பயணிக்கிறது. இந்தப்  படத்தை தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் எடுத்து, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியிடுகின்றனர்.
 
இந்தப் படத்தை ஷிஜின்லால் என்பவர் இயக்குகிறார். இவர் பிரபல விளம்பரப்பட இயக்குனர். இவர் இயக்கும் முதல் படம் அகல்யா. பூஜையுடன் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.