வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2017 (23:08 IST)

சொன்னபடி நடந்துக்க முடியவில்லை! மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் 'நானா தானா வீண போனா' என்ற பாடல் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இன்று மாலை இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த பாடலின் வரிகள் அடங்கிய யூடியூப் வீடியோவை இன்னும் சற்று நேரத்தில் வெளியிடுவதாக தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார்,



 
 
ஆனால் சற்று முன் அவர் தனது டுவிட்டரில், 'மன்னித்து கொள்ளுங்கள். டெக்னிக்கல் விஷயம் காரணமாக யூடியூப் பாடல் வரிகள் வெளியிட முடியவில்லை. நாளை கண்டிப்பாக வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இது சூர்யாவின் ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும் நாளை அவர்களது வருத்தம் நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் அனிருத் இசையமைத்த 'நானா தானா வீண போனா' என்ற பாடலுக்கு நாலா பக்கங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு போன் செய்து வாழ்த்து கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.