தனுஷூக்கு பிரபல நடிகர் கொடுத்த புதிய பட்டம்: வைரலாகும் டுவிட்
நடிகர் தனுஷுக்கு பிரபல நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா ஒரு பட்டத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கிய திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை தனுஷ் வெளியிடுவதாக குறிப்பிட்ட எஸ்.ஜே.சூர்யா, அவரை அமிதாப்பச்சனின் சக நடிகர் என்றும், தலைவர் ரஜினியின் மருமகன் என்றும் சர்வதேச நடிகரும் என்றும் புகழ்ந்துள்ளார். அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. தனுஷ் தான் தளபதி விஜய்யின் திரையுலக தம்பி’ என்று குறிப்பிட்டுள்ளார். தனுஷூக்கு அவர் கொடுத்துள்ள இந்த புதிய பட்டம் தற்போது வைரலாகி வருகிறது
எஸ்ஜே சூர்யா ஜோடியாக பிரியா பவானிசங்கர், சாந்தினி தமிழரசன் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஒரு த்ரில்லர் படமாக இயக்குனர் ராதாமோகன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது