1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (18:38 IST)

விஜய் இடத்தை பிடிக்க குறி வைக்கும் சிவகார்த்திகேயன்?

கேரளாவில் விஜய்யின் படங்களுக்கு என்று ஒரு தனி மார்க்கெட் உண்டு. இதை பிடிக்க தற்போது சிவகார்த்திகேயன் திட்டமிடுகிறார் என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


 

 
கேரளாவில் விஜய்க்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் படம் வெளியீடு என்றால் மலையாள படங்களே வெளியாக தயங்கும். அப்படி ஒரு மார்க்கெட் விஜய்க்கு. இந்நிலையில் தற்போது அந்த மார்க்கெட்டை சிவகார்த்திகேயன் பிடிக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் வேலைக்காரன் படத்தில் மலையாள பிரபல நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். இதனால் இந்த படத்திற்கு கேரளாவிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
 
இதைவைத்து தான் சிவகார்த்திகேயன் விஜய்யின் மார்க்கெட்டை பிடிக்க முயற்சிப்பதாக பேசி வருகின்றனர். இந்த படம் வெற்றி அடைந்தால். அடுத்தடுத்து வெளியாகும் சிவகார்த்திகேயன் படங்கள் மலையாளத்திற்கு போக வாய்ப்புள்ளது.
 
ரேமோ தெலுங்கில் மெகா ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.