1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2022 (18:01 IST)

சிம்புவுக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்

prince
நடிகர் சிம்புவுக்கு , சிவகார்த்திகேயன்  நன்றி கூறி டுவீட் பதிவிட்டுள்ளார்.
 
இயக்குனர் அனுதீப்  கே.வி இயக்கத்தில்,   நடிகர் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள படம் பிரின்ஸ்.  இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில்  நடந்தது. இந்த விழாவில் சிவகார்த்தியன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்

இந்த படத்தின் டிரைலர் ஒரு முக்கிய சமூக பிரச்சனையை அலசுகிறது என்பதும் தெரிய வருகிறது. ஆனால் அதே நேரத்தில் ரொமான்ஸ் மற்றும் காமெடியுடன் கலந்து இயக்குனர் இந்த படத்தை கொடுத்து உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்,  நடிகர் சிம்பு, தன் டிவிட்டர் பக்கத்தில், பிரின்ஸ் டிரைலர் எனக்குப் பிடித்துள்ளது. நான் அதை விரும்புகிறேன் என்று தெரிவித்து, பிரின்ஸ் படக்குழுவை பாராட்டியுள்ளார்.

இதற்கு  சிவகார்த்திகேயேன்  ரீ டுவீட் பதிவிட்டுள்ளார். அதில்,    பிரின்ஸ் பட டிரைலர் நீங்கள் விரும்பியது மகிழ்ச்சியை தருகிறது. மிக நன்றிகள் சார் என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj