விஜய் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வசூல் அளவில் படு பிளாப் ஆனாலும் அவரது மார்க்கெட் இன்னும் கோலிவுட்டில் கொஞ்சம் கூட குறையவில்லை என்பது அவருக்கு அடுத்தடுத்து புக் ஆகி வரும் படங்களில் இருந்து தெரிய வருகிறது
ஏற்கனவே ரவிகுமார், பி.எஸ்.மித்ரன், பாண்டிராஜ் ஆகியோர்களின் படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தை தயாரித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனம், அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது