சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கலைமாமணி விருது! – தமிழக அரசு அறிவிப்பு!
தமிழக அரசின் கலைமாமணி விருது பல்வேறு துறையினருக்கு வழங்கப்படும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இசை, நாடகம், நாட்டுப்புற கலைகள், சினிமா உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களில் சிறந்த பங்களிப்பை வழங்கும் நபர்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள கலைமாமணி விருது பெறுவோர் பட்டியலில் சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் பழம்பெரும் நடிகைகளான சௌகார் ஜானகி, சரோஜா தேவி, நடிகர் ராமராஜன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஐசரி கணேஷ் உள்ளிட்டோருக்கும் கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.