சிவகார்த்திகேயனின் டாக்டர்: அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது என்பது தெரிந்ததே. இருப்பினும் அயலான் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால் அந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தான் வெளியாகும் என்று கூறப்பட்டது
ஆனால் அதே நேரத்தில் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் டாக்டர் திரைப்படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
அனிருத் இசையில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் சிவகார்த்திகேயன் மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது