1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (10:02 IST)

டான் திரைப்படத்தின் டீசர் வராது… ஏன் தெரியுமா?

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் மற்றும் எஸ் ஜே சூர்யா நடித்துள்ள டான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருகிறது.

சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில் திடீரென கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதோடு, ஒரு புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். ஆனால் அதே நாளில் ஆர் ஆர் ஆர் வெளியாவதால் டான் ரிலீஸாகுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் டான் படத்தைப் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் படத்துக்கு டீசர் எதுவும் படக்குழுவினர் உருவாக்கவில்லையாம். நேரடியாக டிரைலர் மட்டுமே வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. நேற்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.