சூப்பர் சிங்கரில் கிரிக்கெட் ஆடிய சிவகார்த்திகேயன்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஆடி மகிழ்வித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர் 6’. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வர். சமீபத்தில் சிம்பு, ராதா, விஜய் ஆண்டனி, கிருத்திகா உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வாரம் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொள்கிறார். விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான சிவகார்த்திகேயன், சூப்பர் சிங்கர் செட்டிலேயே கிரிக்கெட் ஆடி பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவருடன் பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், நடிகர் எனப் பல திறமைகள் கொண்ட அருண்ராஜா காமராஜும் கலந்து கொண்டுள்ளார்.