திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜனவரி 2018 (00:15 IST)

இருமுடி கட்டி மகரவிளக்கை தரிசனம் செய்த பாடகி சித்ரா

பிரபல பின்னணி பாடகி சித்ரா நேற்று சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்தார். அவர் முறைப்படி விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

பெண்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதி இல்லை என்றாலும் வயதின் அடிப்படையில் அய்யப்பனை தரிசிக்க சித்ராவுக்கு தேவஸ்தானம் அனுமதி வழங்கியது

இதனையடுத்து அவர் இருமுடி கட்டி மகரவிளக்கு அன்று அய்யப்பனை சந்தித்து ஜோதியையும் தரிசனம் செய்தார். சமீபத்தில் தேவசம்போர்டு சார்பில் பாடகி சித்ராவுக்கு ஹரிவராசனம் என்ற விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.