ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்.... மண்ணில் படுத்து தூங்கும் சிம்பு!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகி இன்று முன்னணி நடிகராக இருப்பவர் சிலம்பரசன். டி ராஜேந்திரன் என்கிற மிகப்பெரிய சினிமா பின்பலம் அவருக்கு இருந்தாலும் தன்னுடைய திறமையால் படிப்படியாக உயர்வை எட்டினார்.
தொடர்ந்து வெற்றி தோல்வி என சரிசமமாக பார்த்து வந்தாலும் அவரின் மவுஸ் எப்போதும் குறைந்ததே இல்லை. தற்போது மாநாடு படத்தில் நடித்துள்ளார். வருகிற மே 14ம் தேதி இந்த படம் வெளியாகிறது.
இந்நிலையில் தற்போது அப்படத்தின் அரசியல் மாநாடு காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. அதில் நடித்து உடல் சோர்வால் அந்த மண்ணிலே சிம்பு படுத்து உறங்கியுள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை பார்த்தால் "ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்.... தன் கண்ணீரை மூடி கொண்டு இன்பம் கொடுப்பான்" என்ற வரி தான் நினைவுக்கு வருகிறது.