வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 27 ஜூலை 2024 (08:21 IST)

தக் லைஃப் படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கிய சிம்பு!

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.  இதில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் டெல்லி, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் சென்னையில் செட் அமைகப்பட்டு முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன.  அடுத்த கட்டமாக முக்கியக் காட்சிகளுக்காக அயர்லாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது சிம்பு இந்த படத்துக்காக தனது காட்சிகளுக்கான டப்பிங்கை பேசத் தொடங்கியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை வெளியிட அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.